Tuesday, 6 March 2012


நெட்வொர்க்குகளும் இணையமும் எவ்வாறு செயல்படுகின்றன


நெட்வொர்க்குகள் எப்படி செயல்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள, வெவ்வேறு வகையான நெட்வொர்க்குகளையும் அவற்றுடன் இணைந்த சில பெயர்களையும் தெரிந்து கொள்வது அவசியம்:
 


லோக்கல் ஏரியா நெட்வொர்க்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகள் நெட்வொர்க் கார்டுகள் அல்லது கேபிள்கள் கொண்டு இணைக்கப்படும்போது, ஒரு லோக்கல் ஏரியா நெட்வொர்க் அல்லது லேன் (LAN) உருவாக்கப்படுகிறது. இந்த நெட்வொர்க்கில் உள்ள அனைத்து கணினிகளும் பகிர்ந்து கொள்ளப்பட்ட கோப்புகள் மற்றும் கோப்புறைகளை அணுக முடியும்; பிரின்டர்கள் மற்றும் இணைய இணைப்பு உள்ளிட்ட ஆதாரங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

வைட் ஏரியா நெட்வொர்க்

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட LANகள் இணைக்கப்படும்போது, ஒரு வைட் ஏரியா நெட்வொர்க் அல்லது வேன்(WAN) உருவாக்கப்படுகிறது. பெரும்பாலும், WAN பல்வேறு இடங்களில் உள்ள அலுவலகங்களை குத்தகைக்கு எடுக்கப்பட்ட இணைப்புகள் (Leased Lines) அல்லது VSAT (வெரி ஸ்மால் அபெர்டர் டெர்மினல்ஸ்) அல்லது அதே போன்ற ஊடகங்களை கொண்டு இணைக்க பயன்படுகிறது. WAN என்பது பூகோள ரீதியாக பரவிய தொலைதொடர்பு நெட்வொர்க்காகும்.

இணையம்

எளிமையாக சொன்னால், இது போன்ற WAN நெட்வொர்க்குகளின் நெட்வொர்க்கினை பொதுவான ஒரு பெயரிடு முறையின் கீழ் அனைவரும் அணுகும்படி செய்வதே இன்டர்னெட் அல்லது இணையமாகும். இணையம் ஒரு நெட்வொர்க்கின் எந்த ஒரு கணினியில் இருந்தும் மற்றொரு நெட்வொர்க்கின் மற்றொரு கணினிக்கு தகவல்களை கொண்டு செல்கிறது. இதனால், இணையம் தகவல் சுமந்து செல்லும் பொது ஊடகமாக செயல்படுகிறது.

இணையம் என்பது கணினிகளின் ஒரு எலெக்ட்ரானிக் நெட்வொர்க் ஆகும். இணையத்தின் அனைத்து கணினிகளும் நிர்ணயம் செய்யப்பட்ட தரமான இணைய நெறிமுறை (ஐபி) வழியே இயங்குகிறது. ஒரு கணினியில் இருந்து தகவலை மற்றொரு கணினியில் இருக்கும் பயனாளர்கள் (அனுமதி இருப்பவர்களுக்கு மட்டும்) எடுத்துக் கொள்ள இணையம் அனுமதிக்கிறது.

பேக்கெட்டுகள்

ஒரு பேக்கெட் என்பது இணையத்தின் மூல கணினிக்கும் இலக்கு கணினிக்கும் இடையே வழி நடத்தப்படும் தரவு உறுப்பு ஆகும். தகவலை ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு இணையம் வழியே அனுப்பும்போது, இந்த தகவல் சிறப்பாக சென்று சேரும் பொருட்டு சிறு சிறு பேக்கெட்டுகளாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பேக்கெட்டுக்கும் ஒரு அடையாள எண் கொடுக்கப்பட்டு அந்த எண்கள் இலக்கு கணினிக்கு தெரிவிக்கப்படுகிறது. இந்த பேக்கெட்டுகள் இணையத்தின் பல்வேறு தடங்கள் வழியே செல்கின்றன. அவை இலக்கு கணினியை அடைந்தவுடன், அங்கு பேக்கெட்டுகள் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டு மூல தரவாக மீண்டும் மாறுகிறது.

இணையப் பக்கம், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் பதிவிறக்கங்கள் உள்ளிட்ட இணையம் வழி செல்லும் ஒவ்வொன்றும் பேக்கெட்டுகளாகவே பிரிக்கப்படுகிறது.

போர்ட்டுகளும் முகவரிகளும்

ஒரு நெட்வொர்க்கின் ஒவ்வொரு கணினிக்கும் இன்டெர்னெட் போர்ட் (IP) முகவரி எனப்படும் ஒரு தனி அடையாள எண் வழங்கப்படுகிறது. பேக்கெட்டுகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட ஐபி முகவரியின் குறிப்பிட்ட போர்ட்டுக்கு முகவரியிட்டு அனுப்பப்படுகின்றன. இந்த ஐபி முகவரி பேக்கெட்டுகளை தங்களது இலக்குகளை நோக்கி செலுத்துகிறது. இந்த ஐபி முகவரி இரு வகையான வேலைகளை செய்கிறது.
  • இலக்கு கணினியின் நெட்வொர்க் பாகம் மற்றும்
  • மூல கணினி
ஒரு நெட்வொர்க்கில் தரவினை அனுப்பும் மற்றும் பெறும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு சிறப்பு போர்ட் எண் ஒதுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட போர்ட் தகவல் பேக்கெட்டுகளை பெறும்போது, கணினி எந்த பயன்பாடு அந்த பேக்கெட்டினை பெறுகிறது என்பதை அறிகிறது. உதாரணமாக, போர்ட் 80 இணையத்தளங்களின் புரவலராக இயங்கும் வெப் செர்வர்களுக்கானது, போர்ட் 25-ஐ மின்னஞ்சல் உபயோகிக்கிறது.

ஃபயர்வால்கள்

ஃபயர்வால் நெட்வொர்க்கின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியில் இருந்து பிரித்து, அனுமதிக்கப்பட்ட நெட்வொர்க் போக்குவரத்தை மட்டுமே இடையே அனுமதிக்கிறது.
சில ஃபயர்வால்கள் நெட்வொர்க்கினை கடக்கும் பேக்கெட்டுகளை பரிசோதித்து அவை உண்மையானவை தானா என்று உறுதி செய்கின்றன. சந்தேகத்திற்குரியதாக இருந்தால், ஃபயர்வால் அந்த பேக்கெட்டுகளை வடிகட்டுகிறது. உங்களது நெட்வொர்க்கிற்குள் உங்களது கணினியின் அடையாளத்தையும் ஃபயர்வால் மறைத்து விடுகிறது. இதனால் ஹேக்கர்களும் இணைய வல்லூறுகளும் தனிநபர் கணினிகளை இலக்காக கொள்ள முடியாமல் ஆகிறது.

செர்வர்கள்

செர்வர் என்பது ஒரு நெட்வொர்க்கில் இணைந்துள்ள ஒரு கணினி அமைப்பாகும். இது பிற கணினி அமைப்புகளுக்கு சேவைகளை வழங்குகிறது. இது பிரின்டர்களை பகிர்ந்து கொள்வது, கோப்புகளை சேமிப்பது அல்லது இணைய பக்கங்களை விநியோகிப்பது போன்ற செயல்பாடுகளை புரிய பயன்படுகிறது.
பல செர்வர்கள் குறிப்பிட்ட பணிக்கென அர்ப்பணிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு கோப்பு செர்வர் என்பது கோப்புகளை சேமிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு கணினி மற்றும் சேமிப்பு சாதனமாகும். நெட்வொர்க்கில் இருக்கும் எந்த ஒரு பயனாளரும் இந்த கோப்பு செர்வரில் கோப்புகளை சேமிக்கலாம். ஒரு பிரின்டர் செர்வர் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரின்டர்களை கையாள்கிறது.
சில செர்வர்கள் பிற காரணங்களுக்காகவும் உபயோகிக்கப்படலாம். உதாரணமாக, அலுவலகத்தில் இருக்கும் ஒரு நபர் ஒரு பெரிய சக்தி வாய்ந்த டெஸ்க்டாப் கணினியை தன்னுடைய டெஸ்க்டாப் கணினியாக பயன்படுத்தும் அதே சமயத்தில் பிற கணினிகள் அதனை ஒரு செர்வராகவும் பயன்படுத்தலாம்.

0 comments:

Post a Comment